உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் ஒன்றாம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனிடையே, புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி அரசு பொது மருத்துவமனை அருகே நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி! - புதுச்சேரி செய்திகள்
புதுச்சேரி: உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி செவிலி கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
pudhucherry
பேரணியில் மாணவர்கள் எமதர்மன், சந்திரகுப்தன் போல் வேடம் அணிந்து நடனம் ஆடியபடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புதுச்சேரி செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்க வேண்டுமென விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு கையில் பதாதைகளை ஏந்தி பேரணியாகச் சென்றனர்.
இதையும் படிங்க: சாலை போக்குவரத்து சார்பில் எய்ட்ஸ் தினம் கடைபிடிப்பு!