ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வாரில் உள்ள ஜாட்கா கிராமத்தைச் சேர்ந்தவர் கமலேஷ் (22). இவர் கைரத்தால் பகுதியில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஜந்து மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
சம்பளம் கேட்ட தொழிலாளியை சாம்பலாக்கிய முதலாளி - ராஜஸ்தானில் கொடூரம் - தொழிலாளியை எரித்து கொலை செய்த சம்பவம்
ஜெய்ப்பூர்: ராஜாஸ்தானில் ஊதியம் கேட்ட தொழிலாளியை மதுபானக் கடை உரிமையாளர் எரித்துக் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி கமலேஷ் கடை உரிமையாளரிடம் சம்பளம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்ததோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் உரிமையாளர், அவரது நண்பர்கள் இணைந்து கமலேஷை பெட்ரோல் ஊற்றி கொலைசெய்தனர். பிறகு உடலை யாருக்கும் தெரியாமல் கடையின் குளிர் சாதனப் பொட்டியில் மறைந்துவைத்தனர்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக பாஜக தொடர் குற்றச்சாட்டுகளை சுமத்திவருகிறது.