மகாராஷ்டிரா மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் காலத்தில் சிறப்பாக செயல்பட்டவருக்கு விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இதில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
'பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்'
மும்பை: நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.
வெங்கையா நாயுடு
அப்போது பேசிய வெங்கையா நாயுடு, "தாய் நாடு என்றுதான் அழைக்கிறோம். தந்தை நாடு என்று அழைப்பதில்லை. அந்த அளவுக்கு பெண்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம். இந்த நாட்டின் மக்கள் தொகையில் பெண்கள் 50 விழுக்காடாக உள்ளனர். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதன் பின் அவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும்" என்றார்.