தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சரமாரியாக கேள்வி கேட்ட பெண்...! ஆடிப்போன அமைச்சர் - கேள்வி

கடலுார்: தோ்தல் பரப்புரைக்காக கடலூர் வந்த பாமக வேட்பாளர் இரா.கோவிந்தசாமி, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோரிடம் பெண் ஒருவர் சரமாரியாகக் கேள்வி கேட்டதால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பெண்மணி

By

Published : Mar 26, 2019, 6:28 PM IST

அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமகவுக்கு கடலூர் மக்களவைத்தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலூர் மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் இரா.கோவிந்தசாமி இன்று பரப்புரை செய்ய வந்தார். அப்போது அவருடன் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கூட்டணி கட்சியினர் புடைசூழ வாக்கு சேகரித்தனர்.

அப்போது, கோவிந்தசாமி முதன்முதலாக ஒரு வீட்டில் வாக்கு சேகரித்தபோது, அங்கிருந்த பெண், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

  • உங்கள் ஆட்சியில் என்ன மக்கள் நலப்பணிகள் செய்துவிட்டீர்கள்?
  • கடலூர் நகராட்சியில் அவலநிலை பற்றி உங்களுக்கு தெரியுமா?
  • வேலைவாய்ப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டதா?
  • பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கின்றதா?

என பல கேள்விக்கணைகளை அந்தப் பெண் தொடுக்க இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் எம்.சி.சம்பத்மற்றும் பாமக வேட்பாளர் கோவிந்தசாமி சற்று ஆடித்தான் போனார்கள்.

இதைக்கண்ட அதிமுகவினர் கேள்வி கேட்ட பெண்ணை சகட்டு மேனிக்கு திட்டியும், மிரட்டியும் உள்ளதாக தெரிகிறது.

இதில் உச்சகட்டமாக பாமகவின் மாநில துணைப் பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன் அப்பெண்ணிடம் "முதன்முதலில் வாக்கு கேட்டு உங்கள் இல்லம் தேடி வந்தவர்களிடம் இப்படியா பேசுவது! நீங்கள் என்ன லண்டனிலிருந்து வந்துள்ளீர்களா? எனக் கேட்டு மிரட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details