கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் பங்கஜ். இவர் சொந்தமாக ஹார்ட்வேர் ஷாப் நடத்தி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஷபுனா என்பவரைத் திருமணம் செய்த பங்கஜ், மனைவி, மகளுடன் அஷோக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஷபுனா தினமும் நடன வகுப்பிற்கு செல்வதால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு பங்கஜ் அடிக்கடி சண்டையிடுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது.
நடத்தையை சந்தேகித்த கணவன் - மகளைக் கொன்று மனைவி தற்கொலை - apartment
பெங்களூரு: நடத்தை மீது கணவன் சந்தேகமடைந்ததால் விரக்தியடைந்த மனைவி, மகளைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
இதனிடையே வழக்கம்போல நேற்றும் கணவன் - மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பங்கஜ் கோபத்தில் வீட்டை விட்டு ஜெயநகர் லாட்ஜீக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த ஷபுனா, தனது 7 வயது மகளைக் கொன்று, வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கணவனின் சந்தேகத்தால், மகளை கொன்று மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Last Updated : Aug 6, 2019, 11:36 AM IST