தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெண்களுக்காக தித்திக்கும் பீர் அறிமுகம்! - haryana

சண்டிகர்: இந்தியாவில் முதல் முறையாகப் பெண்கள் பீர் என்ற பீர் ரகத்தை அர்டார் 29 என்ற பப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பெண்களுக்காக தித்திக்கும் பீர் அறிமுகம்

By

Published : Jul 24, 2019, 3:33 PM IST

உலகில் பல தரப்பு மக்கள் பீர் பானத்தைக் குளிர்பானங்கள் மாதிரியே சர்வசாதாரணமாக குடித்துவருகின்றனர். குருகிராம் பகுதியில் உள்ள அர்டார் 29 என்ற 'பப்' ஒன்றில் 'இந்தியாவின் முதல் பெண்கள் பீர்' என்ற அடைமொழியுடன் பீர் ரகம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.

இதற்கு பப் நிறுவனம், 'பொதுவாக பீர் கசப்பு சுவை கொண்டதாக இருக்கும். இதனால் பெண்கள் பலரும் பீர் அருந்துவதைத் தவிர்த்துவந்தனர். இதனால் பீர் ரகத்தில் புதுமையான முயற்சி கொண்டுவரலாம் என முடிவு செய்து தித்திக்கும் சுவையில் சம்மர் பீர் எனத் தலைப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்மர் பீர் வாடிக்கையாளரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் பெண்கள் பலரும் விரும்பி அருந்திய காரணத்தால் வாடிக்கையாளர்களுக்காகவே பெண்கள் பீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது' என விளக்கம் அளித்துள்ளது.

பெண்கள் பீர் ரகம் பற்றி தகவல்களைச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து கருத்துகளை பகிர்ந்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details