மும்பையிலுள்ள கல்யாண் என்ற ரயில் நிலையத்தில் மின்சார ரயில் மோதி அனுதேவி துபே (28) என்ற இளம் வயது பெண் உயிரிழந்தார். அவர் ஹெட்ஃபோனில் பாடலை கேட்டபடியே ரயில்வே தண்டவாளத்தைக் கடந்துள்ளார். அப்போது, ஒன்றாம் நடைமேடைக்கு வந்த மின்சார ரயில் மோதியதில், அவர் பலியானார்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடக்காமல் இருக்க, கல்யாண் ரயில் நிலையத்தில் ஒன்றாம் நடைமேடைக்கு அருகே, ரயில்வே நிர்வாகம் சுவர் ஒன்றை எழுப்பிவருகிறது. ஆனால் அதன் கட்டுமானம் பாதி மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.