ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷத்பூர் மாநகரில் உள்ள மாங்கோ பகுதியில், லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர் போல் நடித்து, பெண்ணிடம் இருந்து 50,000 ரூபாய் பணத்தை பறிக்க ஒருவர் முயன்றுள்ளார்.
தாக்கு... அட்டாக்கு; அலுவலர் வேடமிட்டு பணம் கறக்க முயன்றவருக்கு சம்பவம்! - women attacked men
ஜம்ஷத்பூர்: லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற நபரை, பெண் ஒருவர் சரமாரியாகத் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் போலியான நபர் என்பதைக் கண்டறிந்த அப்பெண், பணத்தை கொடுக்க அழைப்பது போல் அழைத்து, அவரை தனது காலணியால் சரமாரியாகத் தாக்கினார். மேலும், இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
பட்டப்பகலில், ஆண் ஒருவரை காலணியால் பெண் தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், போலி அலுவலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.