news by unknown content editor - only updated by abhi
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா பகுதியைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் மீது நான்கு பேர் கொண்ட கும்பல் ஆசிட் வீசியது.
சதார் காவல்நிலையத்திற்குட்பட்ட தமோதர்பூரா கிராமத்தில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக மூத்த காவல்துறை அலுவலர் அனிருத் பங்கஜ் கூறுகையில்,
"காலை நேரத்தில் காரிலிருந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளது. அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ய பெண் காவலர் மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் ஆசிட் வீசியுள்ளதாக தெரிகிறது.
சம்பவத்தின்போது, பெண் காவலரின் அலறலைக் கேட்டதும் உள்ளூர்வாசிகள் உடனடியாக வந்து, ஆசிட் வீசி தாக்கிய கும்பலில் இருவரை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களது பெயர் சஞ்சய் மற்றும் சோனு சிங் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே ஆக்ரா எம்.என். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண் காவலருக்கு 45 விழுக்காடு காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், தப்பியோடிய குற்றவாளிகள் இருவரை வலைவீசி தேடி வருகிறோம்" எனக் கூறினார்.