தெலங்கானா மாநிலம் கொம்மரம் பீம் ஆசிபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மரம் நடுவதற்காக வனத்துறை அலுவலர் அனிதா தலைமையிலான குழு சென்றுள்ளது. தெலங்கானா மாநிலத்தை பசுமையாக்கும் நோக்கத்தில் 'ஹரிதா ஹரம்' என்னும் திட்டத்தின் கீழ் மரங்களை நடும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண் வனத்துறை அலுவலர் மீது தாக்குதல்: வைரலாகும் வீடியோ! - telangana
ஹைதராபாத்: மரம் நடுவதற்காக சென்ற வனத்துறை அலுவலர் அனிதாவை, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் மூங்கில் கட்டையால் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தொண்டர்கள், எம்எல்ஏ கொனேரு கண்ணப்பாவின் சகோதரர் ஆகியோர் இணைந்து மரம் நடுவதற்காக சென்ற வனத்துறை அலுவலரை மூங்கில் கட்டையால் தாக்கியுள்ளனர். அனிதா தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அருகில் இருந்த டிராக்டரில் ஏறிச் சென்ற பின்பும் அவரை மீண்டும் கட்டையால் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. பெண் அலுவலர் என்றும் பாராமல் அங்கிருந்த விவசாயிகள், கட்சியின் தொண்டர்கள் அனிதாவை தாக்கிய சம்பவம் அலுவலர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் மல்லா ரெட்டி கூறியதாவது, அலுவலர் அனிதாவை தாக்கிய கொனேரு கண்ணாப்பாவின் சகோதரர் கோனேரு கிருஷ்ணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.