தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரசவத்தின் போது தாய், சேய் மரணம்: உறவினர்கள் முற்றுகை போராட்டம்

புதுச்சேரி: அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் பிரசவத்தின்போது தாயும், சேயும் உயிரிழந்ததால் உறவினர்கள் முற்றுகை போராட்டம்

DEAD

By

Published : Aug 11, 2019, 1:12 AM IST

புதுச்சேரி கலிதீர்தால் குப்பத்தைச் சேர்ந்த வேல் என்பவரின் மனைவி பாக்கியலட்சுமி. இவர் கடந்த 8 ஆம் தேதி அன்று பிரசவத்திற்காக ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

பிரசவத்தின்போது உயிரிழந்த கர்பிணிப்பெண் பாக்கியலட்சுமி

அப்போது தாய், சேய் இருவரும் மருத்துவர்களின் முயற்சி செய்தும் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் சரியான முறையில் மருத்துவம் பார்க்காததால் தாயும், சேயும் உயிரிழந்ததாகக் கூறி இறந்துபோன பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மருத்துவமனை உறவினர்களால் முற்றுகை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உறவினர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிரசவத்தின்போது தாயும், சேயும் உயிரிழந்தனர்

ABOUT THE AUTHOR

...view details