தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பரிசோதனை மேற்கொள்ள வரிசையில் நின்ற பெண்ணுக்கு பிரசவம்!

22 வயதான நிறைமாத கர்ப்பிணி பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். கரோனா பரிசோதனை செய்த பிறகு தான் அனுமதிக்க முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூற, வரிசையில் நின்றிருந்த அவர், அந்த இடத்திலேயே குழந்தையை ஈன்றெடுத்துள்ளார்.

Woman delivers baby
Woman delivers baby

By

Published : Jul 7, 2020, 10:43 AM IST

லக்னோ (உத்தரப் பிரதேசம்): 22 வயதான நிறைமாத கர்ப்பிணி பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு வந்த நிலையில், கரோனா பரிசோதனை செய்ய காத்திருந்த இடத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பெற்றார்.

முன்னதாக, அவரை மனோஹர் லோகியா மருத்துவமனை நிர்வாகம், கரோனா பரிசோதனை செய்து அதன் முடிவுகள் தெரிந்த பின் தான், உள்ளே அனுமதிக்க முடியும் என்று கூறியுள்ளனர். அதனால் அவர் பரிசோதனை எடுப்பதற்காக வரிசையில் நிறுத்தப்பட்டார். அந்த தருணத்தில், பிரசவ வலி தாங்கமுடியாமல் நிலைகுலைந்த பெண், அந்த இடத்திலேயே ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார்.

காவலரை எட்டி உதைத்த முன்னாள் எம்பிக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்!

பெண்கள் மருத்துவப் பிரிவில் மனைவியை கரோனா சோதனை செய்து வரும்படி அறிவுறுத்தினர். அதற்கு 1,500 ரூபாய் ஆகும் என்று கூறினர். பணம் இல்லாததால் மனைவியை வரிசையில் நிற்கவைத்து விட்டு வீட்டிற்கு பணம் எடுக்கச் சென்றேன். திரும்பி வருவதற்குள் அவர் குழந்தையை பிரசவித்தார் என பெண்ணின் கணவர் ராமன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details