தெலங்கானா மாநிலத்தில் பெண் ஒருவர் பல ஆண்டுகளாக அச்சுறுத்தப்பட்டு கிட்டத்தட்ட 139 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இது குறித்து அவர் ஆகஸ்ட் 20ஆம் தேதி பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதில் அவர், “எனக்கு 2009இல் திருமணமானது. திருமணமாகி மூன்று மாதங்களிலேயே கணவரின் உறவினர்கள் சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். எனது மாமியாரும் என்னை கொடுமைப்படுத்தியதோடு மட்டுமல்லாது இதற்கு உடந்தையாக இருந்தார்.
இதனால் வாழ்க்கையே வெறுத்துப்போன நான் 2010ஆம் ஆண்டு டிசம்பரில் விவாகரத்துப் பெற்றேன். தொடர்ந்து நான் மேற்படிப்பு படிக்கச் சென்றபோது, அங்கும் பலர் என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர். இவ்வாறு கிட்டத்தட்ட 139 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.