ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் புனேயில் உள்ள பீமாசங்கரின் போர்கிரி என்ற இடத்தில நிறைய மின்மினிப் பூச்சிகள் காணப்படும். இந்தப் பளபளப்பான பூச்சிகளைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதால் அங்கு வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு இதன்மூலம் வேலை கிடைக்கும்.
ஆனால் இந்தாண்டு நிலைமையோ முற்றிலும் மாறுபட்டுள்ளது. கரோனா காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்லவே அஞ்சுகின்றனர்.
மின்மினிப்பூச்சிகள் பொதுவாகவே 15 நாள்கள் மட்டுமே வாழும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கியபின் இந்த மின்மினிப்பூச்சிகளைக் காண முடியாது. அதனால் இந்த மின்மினிப்பூச்சி திருவிழா மும்பை, புனே வாசிகளுக்கு மிகவும் பிடித்த ஒரு விழாவாக இருந்துவருகிறது. இந்தாண்டு இதைப் பார்க்க சுற்றுலா வாசிகள் இல்லாததால் கவலையில் உள்ளோம் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.