தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 : மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இன்னும் வரையறுக்கப்படவில்லை! - தேசிய சுகாதார ஆணையம்

டெல்லி : மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து இன்னும் வரையறுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கோவிட்-19 : மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இன்னும் வரையறுக்கப்படவில்லை!
கோவிட்-19 : மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இன்னும் வரையறுக்கப்படவில்லை!

By

Published : May 28, 2020, 5:41 PM IST

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படும் பிரதமர் ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம் தொடர்பாக மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே கடந்த 2018ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசுகளின் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைந்து தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மாநில காப்பீட்டு திட்டத்தில் இடம்பெற்றுள்ளவர்களின் காப்பீட்டுத் தொகை, தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின்படி இணைக்கப்பட்டதை அடுத்து அது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன் மூலமாக உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்களுக்கும் உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் வேகமாக பரவி வரும் கரோனாவால் இதுவரை 1 லட்சத்து 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவக் காப்பீட்டின் மூலம் பயன்பெறும் வகையில், இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பு தொகுப்பு ஒன்றும் வரையறுக்கப்படவில்லை என மருத்துவமனைகள் தகவல் தெரிவித்துள்ளன.

இதன் விளைவாக, இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகள் கோவிட்-19க்கு அளித்த சிகிச்சைக்கு பி.எம்.ஜ.ஆ.ஒய் திட்டத்தின் கீழ் எப்படி உரிமைக் கோருவது என குழம்பியுள்ளன.

கோவிட்-19க்கு எவ்வளவு சிகிச்சை தொகை கோருவது என்பது பற்றிய தெளிவில்லாததால், பல மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் முழு குழப்பத்தில் உள்ளன. மேலும், அத்தகைய சிகிச்சைக்கான செலவீனத்தை கோர முடியாது என்ற அச்சமும் அவர்களுக்கு அதிகரிக்கிறது.

இதன் விளைவாக, பல தனியார் மருத்துவமனைகள், காப்பீட்டு நோக்கங்களுக்காக கோவிட்-19 நோயாளிகளை ‘சுவாசப் பிரச்னை / செயலிழப்பு’என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்துகின்றன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் மூத்த அலுவலர் ஒருவர், “அரசு மருத்துவமனைகளில் கோவிட்-19 க்கான சிகிச்சை இலவசம். ஆனால், தனியார் மருத்துவமனைகளில் அந்த நிலையில்லை. பெரும்பாலான மாநிலங்களில், பி.எம்.ஜ.ஆ.ஒய் திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட தொகுப்பு என எதுவும் அறிவிக்கப்படவில்லை. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் குழப்பத்தில் உள்ளன. இதனால்தான் நோயாளிகள் பெரும்பாலும் சுவாச நோயின் கீழ் வகைப்படுத்தப்படுகிறார்கள். மேலும், சிகிச்சையின் செலவு குறித்து மக்களுக்கு உறுதியாக தெரியவில்லை. பி.எம்.ஜ.ஆ.ஒய் திட்டத்தின் கீழ் ஒரு தொகுப்பு அறிவிக்கப்பட்டிருந்தால், ஏழை மக்களுக்கு சிகிச்சையின் செலவு பற்றி குறைந்தபட்சமாக ஒரு முன்னெச்சரிக்கை ஏற்படலாம்”என கூறினார்.

பி.எம்.ஜ.ஆ.ஒய் திட்டத்தின் கீழ், பெரும்பாலும் வென்டிலேட்டர் கட்டணங்கள் ஒரு நாளைக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை வழங்கப்படும். கோவிட்-19 சிகிச்சையைப் பொறுத்தவரை, பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான கூடுதல் செலவுகள் உள்ளதால் ஒரு நாளைக்கு 7 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் வரை செலவாகும்.

கோவிட்-19 : மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இன்னும் வரையறுக்கப்படவில்லை!

இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) அலுவலரின் கூற்றுப்படி, ”பெரும்பாலான மாநில அரசுகள், இரண்டு மாதங்கள் ஊரடங்கை அறிவித்த பின்னரும் கூட, தேசிய சுகாதார ஆணையத்திடம் (என்.எச்.ஏ) மருத்துவ உதவிகளை அளிக்கும் காப்பீடு பெறும் சிறப்பு தொகுப்பிற்கான ஒப்புதல்களைப் பெறும் பணிகளை இன்னும் தொடர்கின்றன.

தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.ஏ) மருத்துவ சிகிச்சைக்கான உயர் தரத்தை உறுதி செய்ய நினைக்கும் அதேநேரத்தில் அதற்கான கட்டணமும் குறைவாக இருப்பதை உறுதி செய்ய முயற்சிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஆர்.டி-பி.சி.ஆர் சோதனையின் கட்டணத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நிர்ணயித்த 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் குறைவான விகிதத்தில் உறுதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பி.எம்.ஜ.ஆ.ஒய் திட்டத்தை செயல்படுத்தும் உரிமையை தேசிய சுகாதார ஆணையம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க :வெளிமாநில தொழிலாளர்களிடம் இருந்து பயணக்கட்டணம் வசூலிக்கக் கூடாது - உச்ச நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details