பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று பல்வேறு செய்திகள் வெளியானதைத்தொடர்ந்து தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பதிவு வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
இதையடுத்து, அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனும் தனக்கு கரோனா தொற்று இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், அவரது மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், இவர்களது மகளான ஆரத்யாவுக்கும் கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.