காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அப்போது, இந்திய விமானப்படையைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த சமயத்தில் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றத்தை குறைக்கும் பொருட்டு இந்திய அரசின் தொடர் முயற்சிக்கிகளுக்கிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உத்தரவின் பேரில் அபிநந்தன் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். இதைத்தொடர்ந்து, மார்ச் 1-ம் தேதி இந்தியா எல்லையான வாகாவில் கம்பீர நடையுடன் வந்த அபிநந்தனை நாடே ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றது.