தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'நிதிஷ் குமார், சுஷில் மோடிக்கு ஆதரவு எப்போதும் இல்லை' சிராக் பாஸ்வான்! - லோக் ஜனசக்தி கட்சி

மாநில அளவில் நிதிஷ் குமார், சுஷில் மோடி ஆகியோருக்கு எனது ஆதரவு எப்போதும் இல்லை என,லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

will-never-support-nitish-kumar-sushil-modi-chirag-paswan
will-never-support-nitish-kumar-sushil-modi-chirag-paswan

By

Published : Nov 11, 2020, 5:01 PM IST

பாட்னா(பிகார்): பிகார் மாநிலத்தில் 243 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக, அண்மையில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று(நவ.10) நடைபெற்றது. இரவு வரை நீடித்த வாக்கு எண்ணும் பணியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது.

பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களையும், மெகா கூட்டணி 110 இடங்களையும் வென்றது. லோக் ஜனசக்தி கட்சி ஒரு இடத்தைக் கைப்பற்றியது. பிற கட்சிகள் 7 இடங்களில் வென்றது. இதன் மூலம், பிகாரில் மீண்டும் நிதிஷ் குமார் ஆட்சி அமைவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

இந்தநிலையில், நிதிஷ் குமாருக்கு எனது ஆதரவு எப்போதுமே இல்லை, அதேசமயம் பிரதமர் மோடிக்கு எப்போதுமே ஆதரவளிப்போம் என, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “பிகார் மக்கள் எங்களுக்கு அளப்பரிய அன்பை வழங்கி உள்ளனர். சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் எங்களை நம்பி வாக்களித்துள்ளனர். தனித்து போட்டியிட்டு, ஆறு சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். மற்றவர்களின் ஆதரவுடன் கட்சி நடத்தும் சிலர் எங்களை விமர்சித்தனர்.

ஆனால் தனியாக போட்டியிட்டு எங்களை நாங்கள் நிரூபித்துள்ளோம். மாநில அளவில் நிதிஷ் குமார், சுஷில் மோடி ஆகியோருக்கு எனது ஆதரவு எப்போதும் இல்லை. ஆனால் அதேசமயம் மத்தியில் பிரதமர் மோடிக்கு எப்போதுமே எங்கள் ஆதரவு உண்டு" என்றார்.

தொடர்ந்து கூறிய அவர், தேர்தலில் சிரமங்கள் இருந்த போதிலும், செயல்திறன் திருப்திகரமாக இருப்பதாகவும், தற்போதைய நிலையில் தனது கட்சி 2025 தேர்தல் இலக்குக்கு அருகில் இருப்பதைத் தெளிவாகக் குறிப்பிட்ட சிராக், நாங்கள் ஒரு சில இடங்களில் வெற்றிக்கு நெருக்கமாக இருந்தோம், ஆனால் எங்கள் கட்சி சிறப்பாக செயல்பட்டது என்று நான் சொல்ல முடியும். பிகார் தேர்தல் எங்கள் 2025 இலக்கை நெருங்குகிறது என்பதற்கான அறிகுறியை எங்களுக்கு அளித்துள்ளது" என்று சிராக் பாஸ்வான் மேலும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details