நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் அனைத்து, மாநில மற்றும் தேசிய கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. முக்கியமாக மத்தியில் ஆளும் பாஜக, மீண்டும் தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்க வைக்க அனைத்து அரசியல் வியூகங்களையும் வகுத்து செயல்பட்டு வருகின்றது.
வாரணாசியில் மோடி மீண்டும் போட்டி? - நாடாளுமன்ற தேர்தல் 2019
லக்னோ: பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தலை எப்படி அணுகுவது, யாரை எந்த தொகுதியில் நிற்க வைப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டன.
இதில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து ஜார்கண்ட் மாணவர்கள் சங்கத்துடன் கூட்டணி வைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.