டெல்லி அரசுக்கு கீழ் இயங்கிவரும் மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் உரிய ஆவணங்களையுடைய டெல்லி வாழ் மக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும் என டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இதனை ரத்து செய்து டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாஸ் உத்தரவு பிறப்பித்தார். இருவேறு உத்தரவில் எதனை பின்பற்றுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆளுநரின் உத்தரவு பின்பற்றப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "அரசியல் செய்வதற்கான காலம் இதுவல்ல. சட்டப்பேரவைத் தேர்தலில் 62 தொகுதிகளை கைப்பற்றினோம். மத்திய அரசு ஒரு முடிவை எடுத்துவிட்டது. மாற்றுக் கருத்தை தெரிவிப்பதற்கான காலம் இதுவல்ல. இந்த விஷயத்தில் துணை நிலை ஆளுநரின் உத்தரவே அமல்படுத்தப்படும்.