தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கணவனின் காதலிக்குத் தர்ம அடிகொடுத்த மனைவி - வைரல் வீடியோ உள்ளே - viral video

கர்நாடக மாநிலத்தில் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவிலிருந்த கணவனை கையும் களவுமாகக் கண்டுபிடித்து தர்ம அடி கொடுத்த மனைவியின் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

வைரல் வீடியோ

By

Published : Jul 26, 2019, 2:06 PM IST

Updated : Jul 26, 2019, 3:25 PM IST

ஆந்திர மாநிலம் மஞ்சிரியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லக்ஷ்மன். அவருக்கு சௌஜன்யா என்பவருடன் திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. இவர்கள் தற்போது, ஹைதராபாத்திலுள்ள குகத்பள்ளி என்ற இடத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர், லக்ஷ்மனுக்கு வெறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை சௌஜன்யா எதேச்சையாகக் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து புகைப்படங்களைக் காட்டி தனது கணவரிடம் கேட்டபோது, அது தனது பழைய உறவு என்று கூறி சமாளித்துள்ளார்.

ஆனாலும் கணவர் மீது தொடர்ந்து சந்தேகப்பட்ட சௌஜன்யா, அவர்களைப் பிரகதி நகரிலுள்ள ஒரு வீட்டில் கையும் களவுமாகப் பிடித்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற சௌஜன்யா பத்திரகாளியாக மாறி கணவருக்கும் அவரது காதலிக்கும் தர்ம அடி கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த மொத்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

வைரல் வீடியோ
Last Updated : Jul 26, 2019, 3:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details