மதுரையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கும், கேரள மாநிலம் புனலூர் அருகே உள்ள வெள்ளி மலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அமெரிக்காவில் பணியாற்றி வரும் பாஸ்கரன், அங்கிருந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு கேரள மாநிலம் வெள்ளிமலைக்கு நேற்று (ஆகஸ்ட் 17) வந்துள்ளார்.
மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வீட்டின் கதவை திறக்க கூறிய பாஸ்கரனை வீட்டுக்குள் விடாமல் வெளியே பல மணி நேரம் காக்க வைத்துள்ளனர். பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகும் இவரை வீட்டுக்குள் மனைவி அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் ராஜேஷ் என்பவர், பாஸ்கரனின் மனைவியிடம் வாக்குவாதம் செய்து அவரை வீட்டுக்குள் அனுமதிக்க கோரியும் கரோனா அச்சம் காரணமாக உள்ளே அனுமதிக்க முடியாது என்று மறுத்துள்ளார்.