மேற்குவங்கம் கொல்கத்தாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான பேரணியை பாஜக நடத்தியது. பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா இதனை தலைமை தாங்கி நடத்தினார். இந்நிலையில், அம்மாநில துணைத் தலைவரும் சுதந்திர போராட்ட வீரர் சுபாஸ் சந்திர போஸின் பேரனுமான சந்திர குமார் போஸ் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர், "குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை என்றால் இந்து, சீக்கியம், கிறிஸ்தவம், பெளத்தம், பார்சி ஆகிய மதத்தவருக்கு வழங்கப்படும் குடியுரிமை இஸ்லாமியர்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது. அவர்களை ஏன் சேர்க்கக் கூடாது. வெளிப்படையாக இருக்க முயற்சிக்கலாம்.