இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "நாட்டின் நலம் மிகவும் முக்கியமான ஒன்று. அதனைக் காப்பதே அரசின் கடமையாகும். அப்படி இருக்கையில், எல்லைப் பகுதியில் முன்பிருந்த நிலைமை குறித்து சீனாவிடம் இந்தியா வலியுறுத்தாதது ஏன்? ஆயுதம் ஏந்தாத 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த சீனாவுக்கு அனுமதி அளித்தது ஏன்? கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவின் இறையாண்மை குறித்து பேசதாதது ஏன்?" என அடுக்கடுக்காகக் கேள்வியெழுப்பியுள்ளார்.
லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் முதல் மோதல் நிலவிவருகிறது. இந்த மோதலுக்குத் தீர்வு காண ராணுவ-தூதரக அளவில் பேச்சுவார்த்தை நடந்துவந்த சூழலில், சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் (ஜூன்) 15ஆம் தேதி இரவு இருதரப்பு ராணுவத்தினருக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. ஆயுதம் இல்லாமல் நடந்த இந்த மோதலில் படுகாயமடைந்து, 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்தச் சம்பவம் மோதலை உச்சத்துக்கு எடுத்துச் சென்றது.