இந்தியாவில் கரோனா சிகிச்சை குறித்து தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மேற்கொண்ட விசாரணையில் மத்திய அரசிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
கரோனா பெருந்தொற்றுப் பாதிப்பிற்கு அரசு மருத்துவமனைகள் மூலம் மக்கள் இலவச சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தனியார் மருத்துவமனைகள் மூலமும் மக்கள் பயன்பெறும் விதமாக, அரசு ஏன் முன்னெடுப்புகளை எடுக்கவில்லை. 'அரசிடம் இருக்கும் இலவச நிலங்களை ஏன் தனியாருக்கு வழங்கி, தற்காலிக மருத்துவமனை அமைத்து இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ மருத்துவம் அளிக்க வழி செய்யக் கூடாது' எனக் கேள்வியெழுப்பியுள்ளது.