ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரேலிய சுத்திகரிப்புத் தொழிற்சாலையிலிருந்து இன்று வெள்ளைப்புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே 7ஆம் தேதி அங்குள்ள எல்.ஜி. பாலிமர் என்ற தொழிற்சாலையிலிருந்து நள்ளிரவு நேரத்தில் விஷவாயு வெளியாகியது. இந்த விஷவாயுவால் பாதிக்கப்பட்டு பலர் மயக்கமடைந்தனர். பலர் தங்கள் வசிப்பிடத்தைவிட்டு அருகிலிருந்த ஊர்களுக்கு தப்பிச் சென்றனர்.
விசாகப்பட்டினத்தில் மீண்டும் ஒரு தொழிற்சாலையில் வெளியேறிய வெள்ளைப்புகை - VISAKHAPATNAM
16:30 May 21
இந்த விஷவாயு வெளியேற்றத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 32க்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்தன. இதுபோன்ற துயரச்சம்பவம் அரங்கேறி சில நாட்களில், இன்று பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையிலிருந்து புகை வெளியேறிய சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில மணி நேரங்களிலேயே புகை வெளியேற்றம் நின்ற நிலையில், எந்தவித பாதிப்பும் இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் ஆலை நிர்வாகத்தினரிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.
இதையும் படிங்க:காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு