தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தோல்வியடைந்தால்தான் காங்கிரசுக்கு இஸ்லாமியர்களின் நினைவு வருகிறதோ...!'

டெல்லி: சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்குக் காங்கிரஸ்தான் காரணம் என்று ஹைதராபாத் எம்பி ஓவைசி மக்களவையில்  கடுமையாகச் சாடியுள்ளார்.

ஓவைசி

By

Published : Jul 25, 2019, 3:03 PM IST

நடைபெற்றுவரும் மக்களவை கூட்டத்தொடரில் சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் சந்தேகத்தின் அடிப்படையில் எந்தவொரு நபரையும் ஆறு மாதங்களுக்குக் காவலில் வைக்க முடியும்.

இது குறித்து மக்களவையில் பேசிய ஹைதராபாத் எம்.பி.யும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும்போது இஸ்லாமியர்களுக்கு நண்பனாகவும் ஆட்சியில் இருக்கும்போது பாஜகவை விட பெரிய எதிரியாகவும் உள்ளதாக கடுமையாகச் சாடினார்.

சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்குக் காங்கிரஸ்தான் காரணம் என ஓவைசி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிறையிலிருந்தால்தான் தாங்கள் செய்த தவறை உணருவார்கள் என தெரிவித்த ஓவைசி, இந்தச் சட்டம் நிறைவேறி ஒருவர் சிறையில் வைக்கப்பட்டால் (ஆறு மாதம்) அது இந்தியாவின் உலக சாதனையாக இருக்கும் என்றார்.

மக்களவையில் பேசிய ஓவைசி

அமெரிக்காவில் இரண்டு நாட்களும் ஐரோப்பாவில் 28 நாட்களும் மட்டுமே சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை காவலில் வைக்க முடியும் என்று சொன்ன ஓவைசி, இந்தியாவிலோ ஆறு மாதங்கள் வரை காவலில் வைக்க இந்த மசோதா வழிவகுக்கிறது என்றார். இந்திய அரசியலமைப்புக்கு முற்றிலும் புறம்பான இந்த மசோதாவை ஒருநாளும் ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details