கேரள மாநிலம் எர்ணாகுளம் நெல்லிகுழியைச் சேர்ந்த அனஸ் - மல்லிகை தம்பதியின் மூத்த மகள் அல்பியா அனஸ். 15 வயதான இவர் தனது தந்தை வருமானத்திற்காக அல்லல்படுவதைக் கண்டு வீடு வீடாக சென்று பேப்பர் போடத் தொடங்கியுள்ளார்.
தற்போது நெல்லிகுழி மட்டுமின்றி சிரபாடி, ஈரமல்லூர், அம்பாடிநகர் ஆகியவற்றில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்களது செய்தித்தாள்களை அல்பியா அனஸ் கையால் வாங்க காத்திருக்கின்றனர்.
தந்தைக்கு உதவியாய் பேப்பர் போடும் இளம்பெண்! கோதமங்கலத்திலிருந்து அதிகாலையில் செய்தித்தாள்கள் அனைத்தையும் அனஸ் வாங்கி அல்பியாவிடம் கொடுக்கிறார். பின்னர், வீட்டிலிருந்து சைக்கிளை மிதிக்க தொடங்கும் அல்பியா அனஸ், அங்கிருந்து சிரபாடி, ஈரமல்லூர், அம்பாடிநகர் உள்ளிட்ட சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை சென்று செய்தி வாசிப்பு பிரியர்களுக்கு செய்தித்தாள்களை சரியாக கொண்டு சேர்க்கிறார்.
உற்சாகமாக தனது காலையை தொடங்கும் இவர், மழை, பனியை பொருட்படுத்துவதே இல்லை. அதுமட்டுமின்றி தந்தைக்காக தனக்கான பணியை தேர்தெடுத்த அல்பியா அனஸ், பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் உயிரிழந்த விவகாரம் - கைலெடுத்த மனித உரிமை ஆணையம் !