தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய பட்ஜெட் 2019: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? - மத்திய பட்ஜெட் 2019

மளிகை பொருட்கள் விலை குறைக்க வேண்டும் என ஒரு சாரார் கோரிக்கை விடுக்க, பெட்ரோல், டீசல் விலை ஏன் உயர்கிறது என ஒரு சாரார் கேள்வி எழுப்ப, மத்திய வர்க்கத்தினருக்கான வருமான வரி உயர்த்தப்படும் என ஒரு சாரார் ஆரூடம் கணிக்க, இவை அனைத்தும் மத்திய பட்ஜெட்டில் எதிரொலிக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மத்திய பட்ஜெட் 2019: மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

By

Published : Jul 4, 2019, 4:42 PM IST

Updated : Jul 4, 2019, 8:17 PM IST

நாளை தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட் 2019 பற்றி பொதுமக்கள் பலவிதமான கருத்தை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு சிலவற்றைப் பற்றி கீழே காண்போம்.

விவசாய பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம், வறட்சி, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளால் இந்திய அரசு சிக்கித் தவித்து வருகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அபார வெற்றிபெற்ற பாஜக இந்த ஆண்டின் முழு பட்ஜெட்டை ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்கிறது. 50 ஆண்டுகளில் முதல் பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அதனை மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார். இந்த வகையில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அவர்களே தெரிவிக்கின்றனர்.

பெட்ரோல், டீசல் ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகிறது என இந்திய இளைஞர்கள் கேள்வி எழுப்பி வருகின்ற சூழ்நிலையில், ரயிலில் உள்ளதுபோல் பேருந்துகளிலும் சிறப்பு வசதிகள் செய்து தரவேண்டும் என முதியோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடும்பத்தின் நிதி ஆதாரம் குறித்து ஒரு வீட்டின் பெண் சரியாக அறிந்து வைத்திருப்பார். எனவே, இம்முறை நிதியமைச்சர் பெண் என்பதால் நாட்டின் தேவையை அவர் அறிந்திருப்பார் என தான் நம்புவதாக துடிப்புமிக்க குடும்பப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் 2019: மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

நாட்டின் விவசாயிகள் கடினமான சூழலில் இருக்கின்றனர். எனவே நிதியமைச்சர் விவசாயிகளுக்கான திட்டங்களுக்கு தனிக் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்ப்பதாக சமூக அக்கறையுள்ள இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வர்க்கத்தினருக்கான வருமானவரி உச்ச வரம்பு உயர்த்தப்படும் என தான் எதிர்பார்ப்பதாக நம்பிக்கையுடன் நடுத்தரவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உண்மையான வளர்ச்சி பெண்களின் முன்னேற்றத்தில்தான் அடங்கியுள்ளது என்று கார்ல் மார்க்ஸ் கூறியுள்ளார். ஒரு பெண்ணாக நான் இக்கருத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறேன் என இடதுசாரி கருத்துகளை முன்வைத்து ஒருவர் பேசியுள்ளார். மளிகை பொருட்களின் விலை குறைய வேண்டும் என்ற கோரிக்கையே பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் நாளை நிறைவேறுமா... காத்திருப்போம்.

Last Updated : Jul 4, 2019, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details