மும்பை:ஒரு நபர் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டால், அவர்கள் கோவிட்-19 பெருந்தொற்றினை பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும், நோய்க்கு சாதகமாக சோதனை செய்த நபர்களின் பெயர்களை வெளியிடுவதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்று மும்பை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை28) கூறியது.
சட்டக் கல்லூரி மாணவி வைஷ்ணவி கோலேவ் மற்றும் சோலாப்பூரைச் சேர்ந்த விவசாயி மகேஷ் கடேகர் ஆகியோர் தாக்கல் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கோவிட்-19 நோயாளிகளின் பெயர்களை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு, தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி சாரங் கோட்வால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவிட்-19 நோயாளிகளின் பெயர்களை வெளியிடுவதன் மூலம் என்ன நோக்கம் இருக்கும். இதனால், பாதிக்கப்பட்டவர்களை "எப்போதும் ஒதுக்கி வைக்கும் ஆபத்து உள்ளது” என்பதையும் தலைமை நீதிபதி தத்தா சுட்டிக்காட்டினார்.
மேலும், “அனைவரும் ஒவ்வொரு நபரை சார்ந்துள்ளளோம். ஆகவே, கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொள்ளும் போது, அவர்களும் தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் அல்லது அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஆனால் அறிகுறியற்ற பாதிப்பாளர்கள் உள்ளனர். அத்தகைய நபர்களுடன், மக்கள் முகக்கவசங்கள் இல்லாமல் பேசும் சூழலும் உள்ளது” என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.