இந்தியாவின் உள்நாட்டு மொத்தஉற்பத்தியின் வளர்ச்சியானது ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் கடந்த ஏழாண்டில் இல்லாத வகையில் ஐந்து சதவிகிதமாக வீழ்ச்சியடைந்தது. உணவுப் பொருள்கள் விலை அதிகரித்துவருவதால், சில்லறை பணவீக்கம் 10 மாதத்திற்கு பிறகு உயர்ந்துள்ளது. வேலையின்மை விகிதம் கடந்த 45 ஆண்டில் இல்லாத அளவிற்கு தற்போது உயர்ந்துள்ளது.
வேளாண்மை நெருக்கடி, உணவு விலை உயர்வு, அதிகரித்துவரும் வேலையின்மை உள்ளிட்டவை மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்னைகளாகவே மகாராஷ்டிரா, ஹரியானாவில் எதிரொலிக்கத் தொடங்கியது.
இதன்விளைவாக, ஒரு ஆட்சிக்கு எதிரான உணர்வு தற்போதைய அரசுக்கு எதிராக வாக்காளர்களில் ஒரு பகுதியினருக்குள் பரவத் தொடங்கியுள்ளது.
அதனுடன், பாஜக சட்டப்பிரிவு 370 நீக்கம், என்.ஆர்.சி.க்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தது. பின்னர், அக்டோபர் 20ஆம் தேதியன்று வாக்களிப்பதற்கு சரியாக ஒருநாள் முன்னதாக இந்தியப் பாதுகாப்புப் படை - பாகிஸ்தானுக்கு துப்பாக்கிச் சூடு மூலம் கடுமையாக பதிலடி கொடுத்தது. இதன்மூலம் தேசிய பாதுகாப்பு என்ற உணர்வு மூலம் வாக்காளர்களைக் கவரும் யுக்தியைப் பயன்படுத்தியது. பாஜகவின் 'ஆச்சே தின்' என்றளித்த அனைத்து வாக்குறுதிகளையும் முழுவதுமாக நிறைவேற்ற இயலாமல், உண்மையான பிரச்னைகள் குறித்த வாக்காளர்களின் கோபத்தால் ஆளும் பாஜகவின் ஆதரவு சரியத் தொடங்கியுள்ளது. இதனால் வாக்குகள் பிரியும் வகையில் மகாராஷ்டிராவில் உள்ள போட்டி காங்கிரசின் முகாமிலிருந்து வெளியேறியவர்களாலும் ஹரியானாவில் உள்ள பாஜக எதிர்ப்பு கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாமையாலும் ஆளும் பாஜகவுக்கு பெரிதும் உதவியது.
இந்த பாதுகாப்பு யுக்தி முழுமையாக வெற்றியை பாஜகவுக்கு அளிக்கவில்லை. பாஜக + சிவசேனா கூட்டணி 161 இடங்களை வென்றாலும், பாஜகவின் சொந்த எண்ணிக்கை 2014ஆம் ஆண்டு 122 இடங்களிலிருந்தது, தற்போது 105ஆக குறைந்துள்ளது.
ஹரியானாவில், பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், கடந்த தேர்தலில் பெற்ற 47 இடத்திலிருந்து அதன் எண்ணிக்கை தற்போது 40ஆக குறைந்தது. அடுத்த சில மாதங்களில் ஜார்கண்டும் வரும் பிப்ரவரி மாதத்தில் டெல்லியும் வாக்கெடுப்புக்குச் செல்கிறது.