தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹவுடி மோடியிலுள்ள ஹவுடியின் அர்த்தம் என்ன? - அமெரிக்காவில் மோடி

இன்று (செப். 22) டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஹூஸ்டன் நகரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருக்கும் மாபெரும் நிகழ்வான 'ஹவுடி மோடி’ நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்த நிகழ்வின் தலைப்பிலுள்ள 'ஹவுடி’ என்னும் சொல்லின் பொருளை ஆராய்ந்தும் நிகழ்ச்சியை எதிர்நோக்கியும் மக்கள் உள்ளனர்.

Narendra modi attends Howdy modi event

By

Published : Sep 21, 2019, 10:27 PM IST

Updated : Sep 22, 2019, 8:02 AM IST

ஒருவரை நலம் விசாரிக்கவும் வரவேற்கவும் பயன்படுத்தப்படும் பொதுவாக வழக்கத்திலுள்ள "How do you do?" என்னும் வாக்கியத்தின் சுருக்கம்தான், 'Howdy Modi' யிலுள்ள இந்த 'Howdy’ என்னும் சொல். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மற்றும் தென்மேற்கு மாநிலங்களில், அலுவல் முறையற்று, சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் சொல்தான் இது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த மாபெரும் 'ஹவுடி மோடி' நிகழ்வு செப்டம்பர் 22ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் நகரில் நடைபெறவுள்ளது.

அமெரிக்க வரலாற்றில் ஒரு வெளிநாட்டு அரசின் தலைவரை வரவேற்க நடைபெறவிருக்கும் மாபெரும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, இந்த 'ஹவுடிமோடி' நிகழ்வு கருதப்படுகிறது. உலகின் இரண்டு மாபெரும் ஜனநாயக நாடுகளின் தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இணைந்து பெருந்திரளான மக்கள் கூட்டத்தை இந்த நிகழ்வில் சந்திக்கவுள்ளனர். நாளை டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஹூஸ்டன் மாநிலத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த அறுபதுக்கும் மேற்பட்ட பிரபல சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவும் இருக்கிறார்கள்.

2014இல் பிரதமராக பதவியேற்ற பிறகு நடைபெற்ற சந்திப்பு, கடந்த மே மாதம் மீண்டும் பதவியேற்றதன் பிறகான சந்திப்புகளைத் தொடர்ந்து, இது பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பெரிய இந்திய அமெரிக்க சமூக மக்களுடனான சந்திப்பாகும். "50,000க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்க மக்களையும், முக்கியமாக அமெரிக்க குடிமக்களையும் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் இணைந்து சந்திக்கும் வரலாற்று நிகழ்வாக இது இருக்கப்போகிறது" என இந்தியாவின் அமெரிக்கத் தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

ஹூஸ்டன் நகரில் பெய்துவரும் கனமழை டெக்சாஸின் சில பகுதிகளுக்கு அவசர நிலையை அறிவிக்க அதன் மாநில ஆளுநரைத் தள்ளியிருந்தாலும், 'ஹவுடிமோடி' நிகழ்விற்காக வேலைபார்க்கும் தன்னார்வலர்கள் இந்த நிகழ்வை வெற்றிகரமானதாக்க, இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கின்றனர். "இது ஒரு குடும்பக் கொண்டாட்ட நிகழ்வாக இருக்கப்போகிறது. எங்கள் சமூகத்தைப் பாருங்கள், நாங்கள் வெற்றிபெற்றவர்கள். நாங்கள் வலிமையானவர்கள். நாங்கள் ஹூஸ்டனிற்காக சிறந்த விஷயங்களை இங்கே செய்துள்ளோம் என நாங்கள் கூற விரும்புகிறோம். மேலும் மோடி இவையனைத்தையும் தெரிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம்" என இந்நிகழ்வின் தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:

'Howdy Modi' நிகழ்ச்சி - கார் பேரணி!

Last Updated : Sep 22, 2019, 8:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details