தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் என்னென்ன ? - பருவநிலை மாற்றத்தின் விளைவுகள்

அரபிக் கடல் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக சூறாவளிகள் அதிகரித்து வருகின்றன. வெப்ப புயல்கள், அமேசான் காடுகளில் தீ, பயிர் அழிக்கும் வெட்டுக்கிளி கூட்டம் போன்றவை அதிகரித்து வருவது பருவநிலை மாற்றத்தின் விளைவுகளே. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அரசாங்கங்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்லாவிட்டால், நம் எதிர்கால தலைமுறையினர் வாழ முடியாது என்பதே நிதர்சனம். இது தொடர்பாக விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

CLIMATE CHANGE
CLIMATE CHANGE

By

Published : Jun 9, 2020, 4:55 PM IST

இயற்கையை நாம் காப்பாற்றினால், அது நம்மை காப்பாற்றும். ஆனால் சுற்றுச்சூழலை அழிப்பதன் மூலம், நாம் இயற்கை பேரழிவுகளை கட்டவிழ்த்து விடுகிறோம். கடந்த சில ஆண்டுகளாக இந்த உண்மையை பருவநிலை மாற்றங்கள் நிரூபித்து வருகின்றன. மனிதனின் பொறுப்பற்ற தொழில்மயமாக்கல் மற்றும் சுற்றுப்புறங்களை பாதுகாப்பதில் அலட்சியமாக இருப்பதன் விளைவாக இயற்கை பேரழிவுகள் தொடர்ச்சியாக வருகின்றன.

ஒரு சமீபத்திய ஆய்வு இந்தியாவில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சிஎஸ்இ) இந்தியாவில் பருவநிலை மாற்றங்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

வெள்ளம், சூறாவளி அல்லது வறட்சி ஆகியவற்றின் விளைவாக உலகளவில் நிகழும் ஐந்து வகையான சுற்றுச்சூழல் மாற்றங்களில் ஒன்று இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியாவில் இதுவரை 50 லட்சம் பருவநிலை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் காரணமாக 1,357 உயிரிழந்தனர். நிசார்கா சூறாவளி இந்தியாவின் மேற்கு கடற்கரையை தாக்கினாலும், குறிப்பிடத்தக்க சேதமின்றி புயல் கரையை கடந்தது. ஆனால் சூப்பர் சைக்ளோனிக் ஆம்பன் புயல் மேற்கு வங்கம், ஒடிசாவில் பேரழிவை ஏற்படுத்தியது.

1990க்கும் 2016க்கும் இடையில், கடலோர அரிப்பு காரணமாக இந்தியா 235 சதுர கிலோமீட்டர் நிலத்தை இழந்துள்ளது. இந்தியாவில் பருவநிலை துயரங்களுக்கு முக்கிய காரணங்கள் புவி வெப்பமடைதல், வாழ்விடத்தை அழிப்பது ஆகியவைதான் என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது. இந்த ஆய்வில், நாட்டில் அளவுக்கு அதிகமாக காடுகளை அழிப்பதன் விகிதங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CLIMATE CHANGE

நாடு முழுவதும் 280 மாவட்டங்களில் வனப்பகுதிகளை அழிப்பது மற்றும் 5 பெரிய நதிப் படுகைகளில் கடுமையான நீர் நெருக்கடி ஆகியவை சுற்றுச்சூழல் சீர்குலைவின் எச்சரிக்கை மணிகளாக இருக்கின்றன. மேலும், அவற்றுக்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதையும் சுட்டிக்காட்டுகின்றன.

பருவநிலை மாற்றத்தால் 2050ஆம் ஆண்டுக்குள் சஹாரா-ஆப்பிரிக்கா பகுதிகள், தெற்காசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் மட்டும் 14 கோடி மக்கள் அகதிகளாக இருப்பார்கள் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. அதிகரித்து வரும் கார்பன் வெளியேற்றம் காரணமாக, ஏற்கனவே நீர் மாசுபாடு, தொற்று நோய்கள், உணவு பற்றாக்குறை மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு வழிவகுத்தது.

வெள்ளம் அல்லது சூறாவளி ஏற்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும், இந்தியாவின் கடலோரம் மற்றும் வெளிப்புறங்களில் வசிக்கும் மக்கள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஆண்டுதோறும் 17 கோடி இந்தியர்கள் இயற்கை பேரழிவுகளின் சீற்றத்தை எதிர்கொள்கின்றனர். அதிகாரப்பூர்வ ஆய்வுகள் கூட பெரும்பாலான இந்திய மாநிலங்கள் இயற்கை பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பாக இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன.

பேரழிவை எதிர்கொள்வது என்பது மிக முக்கியமானது என்றாலும், சுற்றுச்சூழல் சீரழிவை முதலில் குறைப்பது அதை விட முக்கியம். இந்த தலைமுறையில் இயற்கையின் அழிவு இனியும் தொடர்ந்தால் மனிதகுலம் முற்றிலும் அழிந்து போகக்கூடும். அரபிக் கடலில் சூறாவளிகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. வெப்ப புயல்கள், அமேசான் காடுகளில் தீ, பயிர் அழிக்கும் வெட்டுக்கிளி கூட்டம் போன்றவை அதிகரித்து வருவது பருவநிலை மாற்றத்தின் விளைவுகளே.

ஒரு ஜோடி ஜீன்ஸ் தயாரிக்க சுமார் 7,500 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இது ஒரு வருடத்தில் சராசரி நபர் குடிக்கும் நீரின் அளவுக்கு சமம். நீர் மற்றும் காடுகள் மட்டுமல்ல, ஒவ்வொரு இயற்கை வளமும் விவேகத்துடன் பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அரசாங்கங்களுக்கும் குடிமக்களுக்கும் தொலைநோக்கு பார்வை இல்லாவிட்டால், நம் எதிர்கால தலைமுறையினர் வாழ முடியாது என்பதே நிதர்சனம்.

ABOUT THE AUTHOR

...view details