நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பரப்புரைகள் இந்தியா முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் ஃபெர்தவுஸ் அகமது பரப்புரை மேற்கொண்டார்.
அண்டை நாட்டைச் சேர்ந்தவர் இந்தியாவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஃபெர்தவுஸ் அகமதுவின் விசாவை இந்திய அரசு ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல், அவரை சொந்த நாட்டு திருப்பி அனுப்பியுள்ள உள்துறை அமைச்சகம், அவரின் பெயரை தடை செய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் இணைக்கவும் உத்தரவிட்டுள்ளது.