தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்க அமைச்சருக்கு கரோனா உறுதி! - மேற்கு வங்கத்தில் கரோனா பாதிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க தீயணைப்புத் துறை அமைச்சர் சுஜித் போஸுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க தீயணைப்புத் துறைஅமைச்சர்
மேற்கு வங்க தீயணைப்புத் துறைஅமைச்சர்

By

Published : May 29, 2020, 12:50 PM IST

மேற்கு வங்க மாநில தீயணைப்பு துறை அமைச்சர் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக கள பணியாற்றி வந்தார். இவருடைய வீட்டில் பணிபுரிந்தவருக்கு ஒரு வாரத்திற்கு முன்பு கரோனா உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சுஜித் போஸுக்கும், அவரது குடும்பத்திற்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இம்முடிவுகளில் அமைச்சர் சுஜித் போஸ், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கரோனாவை உறுதி செய்யப்பட்டது. இதனால் அமைச்சருடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது. தற்போது அமைச்சர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அமைச்சர் சுஜித் போஸ், “ எனக்கு எவ்வித கரோனா அறிகுறிகளும் தென்படவில்லை. நான் கரோனாவால் பாதிப்புக்குள்ளானதன் காரணமும் தெரியவில்லை. அதிகளவில் நீர் அருந்திவருகிறேன். விரைவில் குணமடைந்துவிடுவேன்” என்றார்.

மேற்கு வங்கத்தில் கரோனா உறுதி செய்யப்பட்ட முதல் அமைச்சர் சுஜித் போஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்திய-சீன எல்லைத் தகராறு உலகுக்கு அளிக்கும் செய்தி என்ன?

ABOUT THE AUTHOR

...view details