காவல் துறையினரை தாக்கிய பாஜகவினர் கைது! - பிஜேபியினர் கைது
மேற்கு வங்கம்: காவல் துறை அலுவலர்களை மூங்கில் குச்சியால் அடித்ததாக பாஜகவைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் நேற்று( ஜூலை 22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் மாவட்டம் பெலியாபெராவின் பெட்பிந்தியில், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் 'ஜூலை 21' உரையாடல் தொடர்பாக பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலை தடுக்க கோபிபல்லபூரின் காவல் ஆய்வாளர் கௌதம் சக்கரபோர்த்தி முயன்றபோது அவர்கள் அவரை தாக்கினர். நிலைமையை சமாளிக்க சிறிய காவல் படையினர் அங்கு சென்றபோது அவர்கள் தலையில் மூங்கில் குச்சியால் பாஜக உறுப்பினர்கள் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து காவல் துறையினரின் அதிரடிப் படையினர் அங்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலின்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஜார்கிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் பாஜகவை சேர்ந்த 5 தொழிலாளர்களை நேற்று (ஜூலை 22) கைது செய்து ஜார்கிராம் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின் அவர்களை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த மோதலில் இரு கட்சிகளை சேர்ந்த பல உறுப்பினர்களும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.