புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் நமசிவாயம், ஷாஜஹான், கந்தசாமி, கமலக்கண்ணன், மல்லாடி கிருஷ்ணராவ், தலைமைச் செயலர் அஸ்வினி குமார் உள்பட அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இரண்டு மணி நேரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்பு முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்போது, “புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்திவருகின்றோம். இருந்தபோதும் அது முழுமை பெறவில்லை.
புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம்: முதலமைச்சர் நாராயணசாமி தகவல் நகராட்சிகளில் ஐந்தாயிரம் செலுத்தி பாதாளச் சாக்கடை இணைப்பு நடைபெற்றுவந்தது. தற்போது அமைச்சரவையில் அதனை இலவசமாக இணைத்துக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரி, உழவர்கரை நகராட்சியைச் சேர்ந்த 66 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும், அமைப்புசாரா தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும்வகையில் அவர்களுக்கு என்று தனி நலவாரியம் அமைக்கப்படும்.
அதேபோன்று கால்நடை பெருக்கத்தை அதிகரிக்க கால்நடை வளர்ப்பு அமைப்பு ஒன்று உருவாக்க குழு அமைக்கப்படும் என்றும் அமைச்சரவையில் முடிவுசெய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: 'தரக்குறைவாக பேசுவது கண்ணியமில்லை' - நாராயணசாமிக்கு கிரண்பேடி கடிதம்!