தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாகனம் ஓட்டும்போது முகக்கவசம் கட்டாயம் - டெல்லி அரசு - ஆம் ஆத்மி அரசு,

டெல்லி: டெல்லியில் ஏப்ரல் மாதம்முதல் வாகனம் ஓட்டும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டதாகவும், இந்த உத்தரவு இன்றுவரை நடைமுறையில் உள்ளது என்றும் ஆம் ஆத்மி அரசு,  டெல்லி உயர் நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றம்

By

Published : Nov 18, 2020, 6:33 PM IST

சவுரப் சர்மா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், செப்டம்பர் ஒன்பதாம் தேதி தான் வேலைக்குச் செல்லும்போது, டெல்லி காவல்துறை அலுவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அவர் காரில் தனியாக இருந்தபோதிலும் முகக்கவசம் அணியவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தனக்கு அபராத சலான் வழங்கிய அலுவலர்கள், வாகனத்தில் தனியாக பயணம் செய்யும் போது, முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று பிறப்பிக்கப்பட்ட எந்தவொரு ஆணையையும் தன்னிடம் வழங்கவில்லை என்றும், சலான் எழுதும்போது, வாகனத்தில் தனியாக இருந்தேன் என்பதை குறிப்பிட சொன்னதை அலுவலர்கள் செவிசாய்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதானல், தான் அபராதமாக செலுத்திய ரூ. 500 திருப்பித் தரவும், தனக்கு ஏற்பட்ட மனநல உளைச்சலுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி நவின் சாவ்லா முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (டி.டி.எம்.ஏ) உத்தரவைத் தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் ஏப்ரல் நான்காம் தேதி ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது காரில் தனியாக வாகனம் ஓட்டும் நபர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. வாகனத்தில் தனியாக பயணிக்கும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்க எந்த சட்ட அறிவிப்பும் இல்லாத நிலையில், அபராதம் விதிக்கப்படுவது சட்டவிரோதமானது என்று வாதிட்டார்.

இதற்கு டெல்லி அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், டெல்லியில் ஏப்ரல் மாதம்முதல் வாகனம் ஓட்டும்போது, முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டதாகவும், இந்த உத்தரவு இன்றுவரை நடைமுறையில் உள்ளது. மேலும், தனியார் வாகனமும் பொது இடம் தான் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியது. இதனையடுத்து, மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ABOUT THE AUTHOR

...view details