இச்சம்பவம் குறித்து அரசு அலுவலர் ஒருவர் கூறுகையில், "மணிப்பூர் மாநிலம், காம்ஜொங் மாவட்டத்தில் உள்ள கஷும் என்ற கிராமம் நோக்கி அஸ்ஸாம் ரைபில்ஸ் மற்றும் மணிப்பூர் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் சென்றுகொண்டிருந்தனர்.
இவர்கள் ஹோங்பே சந்திப்பில் உள்ள நுங்ஷிட் ஹெய்பி பகுதி வழியாகச் செல்லும் போது, 'எங்களுக்கு அமைதி தான் வேண்டும், கரோனா வைரஸ் வேண்டாம்' என முழக்கமிட்டவாறு கொட்டும் மழையில் தீப்பந்தங்களை ஏந்தி வந்த நாகா பழங்குடியின பெண்கள் அவர்களை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.