தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாஹாராஷ்டிராவில் காங்கிரஸுக்கு ஆதரவு: திமுக - stalin

சென்னை: மக்களவைத் தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் பேட்டியிடும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு திமுக ஆதரவு தருவதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின்

By

Published : Apr 12, 2019, 3:59 PM IST

மராட்டிய மாநிலத்தில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கு நேற்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.
தொடர்ந்து, வரும் ஏப்ரல் 18ஆம் தேதி 10 தொகுதிகளிலும், ஏப்ரல் 23ஆம் தேதி 14 தொகுதிகளிலும், ஏப்ரல் 29ஆம் தேதி 17 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு திமுக ஆதரவு தருவதாக அக்கட்சி தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நடைபெற இருக்கும் 17வது மக்களவைத் தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பதென திமுக முடிவெடுத்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details