உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பாத் மாவட்டத்தில் இளைஞர்கள் சிலர் தங்களது நண்பனின் பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர். இவர்கள் பிறந்தநாள் கேக்கை கத்தியைக் கொண்டு வெட்டுவதைத் தவிர்த்து துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளனர்.
என்னது கேக் வெட்ட கத்தியா? நெவர் நம்ம ஸ்டைல் துப்பாக்கிதான்! - துப்பாக்கி சூடு
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பாத் மாவட்டத்தில் இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் வெட்டுவதற்கு துப்பாக்கியை பயன்படுத்திய காணொலி இணையதளத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
மேலும், இச்சம்பவத்தை அவர்கள் காணொலி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இவர்களது இந்தப் பதிவு பலராலும் பகிரப்பட்டுவருகிறது. பொது இடங்களில் இம்மாதிரியான வன்முறையைத் தூண்டும் செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டுவருவது பலராலும் விவாதத்திற்குள்ளாகிவருகிறது.
இந்தக் காணொலியைப் பார்த்த பலர் இச்சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சரூர்பூர் கேர்கி என்ற கிராமத்தில் நடந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர். இச்சம்பவம் குறித்து பேசிய பாக்பாத் காவல் உயர் அலுவலர் ஓ.பி. சிங், இந்நிகழ்வில் ஈடுபட்ட இளைஞர்கள் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.