பிகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் கங்கை ஆற்றின் ஓரத்தில் இயங்கிவந்த அரசுப் பள்ளிக் கட்டடம் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட மண்ணரிப்பில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. கங்கை ஆற்றின் ஓரம் செயல்பட்டுவந்த இப்பள்ளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. இங்கு 150 மாணவர்கள் படித்துவந்தனர்.
கங்கை ஆற்று வெள்ளத்திற்கு இரையான அரசுப்பள்ளி - பதைபதைக்கும் காணொலி! - மண்ணரிப்பு
கதிஹார்: மழை வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பள்ளிக் கட்டடம் மண்ணரிப்பு ஏற்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
watch-school-gets-washed-away-in-river-ganga-in-bihars-katihar
இந்த நிலையில், கட்டடத்தின் கீழ்ப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து நீரில் அடித்துச் செல்லப்படுவதோடு, இறுதியில் கட்டடம் முழுவதும் நொறுங்கி நீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டது. இந்தக் காட்சி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கிவரும் நிலையில், அங்குள்ள பல்வேறு இடங்களிலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.