ஹரியானா மாநிலம் ஜிந்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் நேற்று (செப். 29) மதியம் வழக்கம்போல் பணத்தை எண்ணியுள்ளனர். அப்போது வங்கியின் இருப்புத் தொகையிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் குறைந்திருப்பதை உணர்ந்துள்ளனர்.
இதனையடுத்து அந்தப் பணம் குறித்து விசாரிப்பதற்காக சிசிடிவி காட்சிகளைப் பார்த்துள்ளனர். அப்போதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.
சரியாக மதியம் ஒரு மணிக்கு வங்கியில்உள்ளே நுழைந்த பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன், பக்கத்தில் இருந்தவரின் ஆலோசனைப்படி காசாளரின் அறையை நோட்டமிட்டு, பின்னர் காசாளர் வெளியே சென்றதைப் பார்த்துவிட்டு, அறைக்கு உள்ளே நுழைந்து, அங்கிருந்து 20 லட்சம் ரூபாயை தனது பையில் தூக்கிப் போட்டுக் கொண்டு வெளியே வந்துவிடுகிறான்.