தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிளாஸ்டிக் முதல் எரிபொருள் வரை - பொறியாளரின் மாஸ் ஐடியா!

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து  டீசல், விமான எரிபொருள் மற்றும் பெட்ரோல் போன்ற எரிபொருள்களையும் ஜெனரேட்டர்களுக்குத் தேவையான எரிவாயுக்களையும் உருவாக்கும் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளார் சதீஷ்குமார்.

Plastic free nation
Plastic free nation

By

Published : Dec 26, 2019, 11:54 AM IST

அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிக்க, புதியதொரு தீர்வை முன்வைத்துள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் சதீஷ் குமார். இவர் மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு எரிபொருளை உருவாக்குகிறார்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 2050ஆம் ஆண்டில் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் பொருள்களே அதிகமாக இருக்கும் என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. நாட்டிலுள்ள பலரும் தங்களால் முடிந்த அளவு பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற ஒரு முயற்சியை முன்னெடுத்தவர்தான் இந்தப் பொறியாளர்.

இவர் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு எரிபொருளை உருவாக்குகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மறுசுழற்சி செய்யமுடியாத 500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து 400 லிட்டர் எரிபொருள் உருவாக்கப்படும்" என்றார்.

பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்ற சதீஷ்குமார் மூன்று கட்ட செயல்முறையைக் கடைபிடிக்கிறார். முதலில், வெற்றிடத்தில் மறைமுகமாக சூடாக்கப்படும் பிளாஸ்டிக், பின் டீ பாலிமரைசேஷன் எனப்படும் பலபடியாக்கல் முறைக்கு உட்படுத்தப்படுகிறது. பின் குளிர்விக்கப்படுகிறது.

இதன் காரணமாக டீசல், விமான எரிபொருள் மற்றும் பெட்ரோல் போன்றதொரு செயற்கை எரிபொருள்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த எரிபொருள்கள் பார்க்க பெட்ரோலைப் போலவே இருந்தாலும், அவற்றின் பண்புகளில் வேறுபட்டவை. Plastic pyrolysis (பிளாஸ்டிக் ககளை மறுசுழற்சி செய்யப்பயன்படும் ஒரு முறை) முறையிலிருந்து இவர் பயன்படுத்தும் முறை முற்றிலும் வேறானது. மாறுபட்டது.

இந்த செயல்முறையில் சிம்னியையும் நீரையும் நாங்கள் உபயோகிப்பதில்லை. எரிபொருள்கள் தயாரிக்கப்படும் இந்த செயல்முறைகளில் பிளாஸ்டிக்கின் எந்தவித எச்சங்களும் உருவாவதில்லை. இதில் உற்பத்தியாகும் எரிவாயுக்கள் ஜெனரேட்டர்களை இயக்கவும், மீதமுள்ள கார்பன் கழிவுகள் தாவரங்களில் உரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

பிளாஸ்டிக் முதல் எரிபொருள் வரை

நாம் உடுத்தும் ஆடைகள் 80 விழுக்காடு பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. அனைத்து மருத்துவப் பொருட்கள் பிளாஸ்டிக்காலேயே செய்யப்பட்டவை. இன்று, மக்கள் பிளாஸ்டிக் இல்லாமல் வாழ முடியாது.

பிளாஸ்டிக் இல்லாமல் மக்கள் வாழத்தேவையில்லை என்று கூறும் சதீஷ், பிளாஸ்டிக்கை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதே அவசியம் என்கிறார். பிளாஸ்டிக் என்பது எரிபொருள்தானேத் தவிர வேறொன்றுமில்லை, என்பதை மக்களுக்குப் புரிய வைப்பதே இவரின் நோக்கம்.

பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வால், இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டாலும், ஏற்கனவேயுள்ள பிளாஸ்டிக் கழிவுகளின் சிக்கலைச் சமாளிக்க பல ஆண்டுகள் ஆகும். மக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தும் முறையை மாற்ற கடுமையானச் சட்டங்களும் தேவை என்கிறார், சதீஷ் குமார்

கண்ணாடி, உலோகம், காகிதம், பிளாஸ்டிக் மற்றும் கரிமக் கழிவுகள் என ஐந்து வகையான கழிவுகள் மட்டுமே உள்ளன என்றும்; இவை அனைத்தையும் திறமையாக நிர்வகிக்க முடியும் என்றும் நம்புகிறார், இந்தப் பொறியாளர்

தான் செய்வதை போன்ற முயற்சிகள் குறித்து மக்களிடையே உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டால், பிளாஸ்டிக் கழிவுகளை இந்தியா திறம்பட நிர்வகிக்கும் என்கிறார், பொறியாளர் சதீஷ். நல்ல எண்ணங்கள் நிச்சயம் கைகூடும் என்பது உறுதி.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடகர்!

ABOUT THE AUTHOR

...view details