தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'யார் துரியோதனன்?' பிரியங்கா-அமித்ஷா வார்த்தைப் போர் - modi

சண்டிகர்: பிரதமர் மோடி துரியோதனனைப் போல் ஆணவம் கொண்ட மனிதர் எனப் பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரையின் போது காட்டமாக விமர்சித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அதற்கு உடனடியாக பதிலடி தெரிவித்துள்ளார்.

பிரியங்கா - அமித்ஷா

By

Published : May 7, 2019, 7:10 PM IST

பிரதமர் மோடி அண்மையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைத் திருடன் எனவும், ஊழல்வாதி எனவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதுகுறித்து அனைத்து தரப்பிலிருந்தும் மோடிக்கு கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இறந்தவரை பற்றி பிரதமர் பதவியில் இருப்பவர் இப்படி பேசலாமா என அனைத்து எதிர்கட்சிகளும் வரிந்துகட்டிக்கொண்டு கண்டனக் குரலை பதிவிட்டு வருகின்றன.

இந்நிலையில் உத்தரப்பிரதேச கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், ராஜீவ்காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி இன்று ஹரியானா மாநிலம் அம்பாலாவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடியை விமர்சிக்கும் வண்ணம் அவர் பேசியதாவது, இந்தியா எப்போதும் ஆணவம் மிக்க மனிதர்களை விட்டு வைத்ததில்லை, மகாபாரதத்தில் துரியோதனன் ஆணவத்திற்கு கிருஷ்ணர் சரியான பாடம் கற்பித்தார், மக்களும் மோடிக்கு விரைவில் சரியான பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.

மோடி குறித்து பிரியாங்கா விமர்சனம்

இதற்கு பதிலடி தரும் வகையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பிரியங்கா சொல்லிவிட்டால் மோடி ஒன்றும் துரியோதனன் ஆகிவிடமாட்டார், யார் துரியோதனன், யார் அர்ஜுனன் என மே 23 ஆம் தேதி மக்கள் பதில் சொல்லுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா பதிலடி

ABOUT THE AUTHOR

...view details