எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முத்தலாக் சட்டத் திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு மாநிலங்களவையில் நடைபெற்றது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்தச் சட்டத்தில் மேலும் திருத்தம் கொண்டு வர கோரிக்கை விடுத்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியதால், முத்தலாக் முறைக்கு தடை உறுதியாகியுள்ளது.
மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றம்! - முத்தலாக்
டெல்லி: மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் முத்தலாக் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியுள்ளது.
மாநிலங்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளில் பாஜகவுக்கு 78 உறுப்பினர்களும், அதிமுகவுக்கு 11 உறுப்பினர்களும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 6 உறுப்பினர்களும் உள்ளனர். இதில் அதிமுக மற்றும் பகுஜன் சமாஜ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது. இதனால் மாநிலங்களவையில் சட்டம் நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை எண்ணிக்கை குறைந்தது. இதனால், முத்தலாக் தடை சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.