தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விசாகப்பட்டினம், சைனர் பார்மா விஷவாயு கசிவில் இருவர் உயிர் இழப்பு! - Visakhapatnam

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் பரவடா, ஜவஹர்லால் நேரு பார்மா சிட்டியிலுள்ள சைனர் பார்மா நிறுவனத்தில் விஷ வாயு கசிந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

vizag gas leak 2 dead விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சைனர் பார்மா விஷவாயு கசிவு Visakhapatnam 2 dead, 4 injured in blast at Sainor Pharma uni
vizag gas leak 2 dead விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சைனர் பார்மா விஷவாயு கசிவு Visakhapatnam 2 dead, 4 injured in blast at Sainor Pharma uni

By

Published : Jun 30, 2020, 7:13 AM IST

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பரவடா பகுதியில் ஜவஹர்லால் நேரு பார்மா சிட்டி அமைந்துள்ளது. இங்கு சைனர் பார்மா என்ற நிறுவனம் செயல்பட்டுவருகிறது.

இந்த நிறுவனத்தில் இன்று காலை எதிர்பாராதவிதமாக திடீர் விஷவாயு கசிந்து விபத்துக்குள்ளானது. இதில் ஊழியர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நான்கு பேர் காயமுற்றுள்ளனர். இந்த விபத்து குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் சம்பவ பகுதியில் மாவட்ட ஆட்சியர் விநாயக்சந்த் சி.பி., மீனாவும் ஆய்வு நடத்திவருகிறார்.

ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் மே மாதம் 7ஆம் தேதி நடந்த மற்றொரு விஷவாயு கசிவு விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் பதவி நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details