அடையாளம் தெரியாத அந்த மேம்பாலத்தில் வாகனங்கள் சென்றால் மறைந்துவிடும். இது உண்மையா என்பது சிலருக்கும் சந்தேகம் ஏற்படலாம். ஆனால் அது உண்மையே. கடுமையான டிராஃபிக்கில் மாட்டிக்கொள்ளும் வாகனங்களால் விபத்து நிகழ்வது சகஜமாகிறது. சில நேரங்களில் உயிரிழப்பும் நிகழ்கிறது. ஆனால், இந்த டிராஃபிக் காணொளியை பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்தும். எப்படி சாத்தியம் என்று உச்சுக்கொட்ட தோன்றுகிறது.
பார்ப்பது நிஜம்! உற்றுக்கவனித்தால் எல்லாம் மாயை - வைரல் வீடியோ... - கிராபிக்ஸ்
டிராஃபிக்கின்போது ஒரு மேம்பாலத்தில் செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மாயமாக மறைந்து செல்லும் காணொளி நெட்டிசன்களை குழப்பி வருகிறது.
இந்த பாலத்திற்குள் செல்லக்கூடிய இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மறைந்து செல்வதைக் கண்ட நெட்டிசன்கள் குழம்பியுள்ளனர். நன்றாக உற்றுக் கவனித்தால் மட்டுமே அது கிராஃபிக்ஸ் என்பது தெரியவரும். டேனியல் என்பவர் இந்த டிராஃபிக் காணொளியை மிக தத்ரூபமாக கிராபிக்ஸ் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தக் காணொளியை 63,000 பேர் பகிர்ந்துள்ளனர். இதனைக் கண்ட நெட்டிசன்கள் 'ஒருவேலை ஹாரிபாட்டர் படத்தில் இடம்பெற்ற பாலமாக இருக்கலாம்' என்றும், சூப்பரா இருக்கு இப்படி வாகனங்கள் மறைந்தால் டிராபிக் தொல்லை இருக்காது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இந்தக் காணொளி வலைதளத்தை கலங்கடித்து வருகிறது.