உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் நடந்த திருமண நிகழ்வில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியை தனது முகத்தின் அருகில் வைத்துக்கொண்டு நடனமாடுகிறார்.
துப்பாக்கியுடன் நடனமாடிய இளைஞர் - வைரலாகும் வீடியோ! - சமூக வலைதளத்தில் வைரலான காணொலி
நொய்டா: திருமண விழாவில் தூப்பாக்கியுடன் நடனம் ஆடும் இளைஞர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியுடன் நடனமாடும் இளைஞர்
இதுகுறித்து காவல்துறை சார்பில் கூறுகையில், ‘திருமண விழாவில் துப்பாக்கி வைத்திருக்கும் இளைஞர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பொது இடங்களில் இதுபோன்று துப்பாக்கியை வைத்து போஸ் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். சம்மந்தப்பட்ட இளைஞர் குறித்து விவரம் தெரிந்தவுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.