தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மதுவாங்க குடை வேண்டும்...' - தகுந்த இடைவெளியில் ஆந்திரா!

அமராவதி: மதுக்கடைகளுக்கு வருபவர்கள் அனைவரும் குடைகளை பிடித்துக்கொண்டு தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என தெனாலி காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

்ே்
்ே

By

Published : May 5, 2020, 4:18 PM IST

ஆந்திராவில் கரோனா வைரஸ் அச்சத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் அனைத்தும், தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலறிந்த மதுப்பிரியர்கள் சும்மா விடுவார்களா... கடைகளுக்கு முன்பு வரிசையில் நின்று, மதுவை வாங்கிச்சென்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியில் காவல் துறையினர், தகுந்த இடைவெளியைப் பின்பற்ற புதிய முயற்சியை கையாண்டுள்ளனர். அதாவது, கடைகளுக்கு வரும் அனைவரும் குடைகளை பிடித்துக்கொண்டு தான் வரிசையில் நிற்க வேண்டும். இதன் மூலம், ஒவ்வொருத்தருக்கும் இடையே மூன்று அடி இடைவெளி இருக்கும் எனவும் கருதுகின்றனர்.

ஆந்திராவில் உள்ள 3 ஆயிரத்து 468 மதுபானக் கடைகளில், தற்போது 2 ஆயிரத்து 345 கடைகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நொய்டாவில் மதுபானக் கடையில் அலைமோதும் கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details